மனித உயிர்களுக்கு மதிப்பில்லை! – அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், இடிந்து விழும் அரசு கட்டிடங்கள்…!

COVAI SOMANUR BUS STAND

COVAI SOMANUR BUS STAND 1 சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தபோது.

கடந்த மாதம் 7-ந்தேதி கோயம்புத்தூர் மாவட்டம், சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து இறந்தவர்களின் துக்கம் நம் நெஞ்சை விட்டு  இன்னும் நீங்கவில்லை.

அதற்குள் அதே போன்ற ஒரு துயர சம்பவம், இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

bus driver and contactors in ngai g;vt bus depot1

Nagai Bus Depot

இன்று இடிந்து விழுந்த பொறையார் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பணிமனை.

bus driver and contactors in ngai g;vt bus depot

ஆம், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், பொறையார் கிராமத்தில், அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பணிமனை இன்று (20.10.2017) அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்ததில், ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்த 20  தொழிலாளர்களில், ஓட்டுனர், நடத்துனர்கள் 8 பேர் கட்டிட  இடிபாடுகளில் சிக்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மூன்று நபர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம், மணக்குடியைச் சேர்ந்த கனி, காலமநல்லூரைச் சேர்ந்த மணிவண்ணன், கீழகாசாக்குடியைச் சேர்ந்த தனபால், காளஹஸ்தினாபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன், பாலு, கீழையூரைச் சேர்ந்த சந்திரசேகர், சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மற்றும் கீழப்பெரம்பூரைச் சேர்ந்த முனியப்பன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதில்  பிரபாகரன், பாலு ஆகியோர், ஒரே ஊரைச் சேர்ந்த அண்ணன், தம்பிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதை நினக்கும்போது நெஞ்சம் கனக்கிறது.

74 ஆண்டுகள் பழமையான, பாழடைந்த கட்டிடத்தை பழுது பார்க்காமல், போக்குவரத்துக் கழக பணிமனையை இயக்கியதுதான், விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் பலியானதற்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது.

இதற்கு காரணமான சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.  இதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். இதற்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உடனடியாக உத்தரவிட வேண்டும்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அனைத்து கட்டிடங்களையும் போர்கால அடிப்படையில் ஆய்வு செய்து, அதில் பழமையான, பாழடைந்த, பழுதடைந்த, சிதிலமடைந்த, சேதமடைந்த ஆபத்தான கட்டிடங்கள் எத்தனை என்பதை கணக்கெடுத்து, உடனே சீர் செய்ய வேண்டும். இல்லையென்றால், அக்கட்டிடங்களை பூட்டி சீல் வைக்க உத்தரவிட வேண்டும். இவற்றை கண்காணிக்க முதலமைச்சர் தலைமையில்  வல்லுனர்கள் குழுவை உடனே அமைக்க வேண்டும்.

இல்லையென்றால், மனித உயிர்களுக்கு இங்கு மதிப்பில்லாமல் போய்விடும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com