“மெர்சல்” திரைப்பட விவகாரம்!-இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுவை கலைத்து விடுங்கள்..!

MERSAL2MERSAL 1

MERSAL -CENTRAL BOARD OF FILM CERTIFICATION

MERSAL

ரஜினி, கமல், அஜித், விஜய்….  இப்படி பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் இதை தடுப்பதற்கு என்றே ஒரு கும்பல் தயாராகி விடுகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவந்துள்ள “மெர்சல்” திரைப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சாதி, மத அமைப்புகள்தான் பிழைப்பு நடத்துவதற்காகவும், பிரபலமாவதற்காகவும் இதுப்போன்ற பிரச்சனைகளை உருவாக்குவார்கள்; பேரம் படிந்த பிறகு மறுபடியும் அமைதியாகி விடுவார்கள்.

ஆனால், இந்த முறை மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க- வை சேர்ந்த மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனே இப்பிரச்சனைக்கு காரணமாக அமைந்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது உண்மையிலுமே வருத்தமாக இருக்கின்றது.

டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனின் இத்தகைய நடவடிக்கை, மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவை அவமதிக்கும் செயலாகும். இதன் மூலம் மத்திய ஆட்சி நிர்வாகத்தையே கேலிகூத்தாக்கி இருக்கிறார். ஆம், மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பும் நடவடிக்கையாகதான் இதை  நாம் கருத வேண்டி இருக்கிறது. 

ஒரு சாதாரண விசியம், இன்று சர்வதேசப் பிரச்சனையாக  மாறியிருக்கிறது. இதன் மூலம் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய பலமும், விளம்பரமும் இலவசமாக கிடைத்துள்ளது. இதற்காகவே டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு, நடிகர் விஜய் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும்.

இதன் மூலம் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு என்றால் என்ன? அவற்றின் சட்டத் திட்டங்கள் என்ன? ஒரு திரைப்படம் எப்படி தணிக்கை செய்யப்படுகிறது? எது மாதிரியான தரச்சான்றுகள் வழங்கப்படுகிறது? இப்படி எந்த விபரமும் முழுமையாக தெரியாமல்  திரைப்படங்களைப் பற்றி குறைக்கூறுவது, “யானையை தடவி பார்த்து குருடன் குறிச் சொன்ன கதையாகத்தான் இருக்கும்”.

இந்தியாவில் விடுதலைக்குப் பின்பு ஒழுக்கத்தையும், அறநெறிகளையும் மீறாத வகையில் திரைப்படக் காட்சிகள், வசனங்கள், பாடல்கள், நடிப்பவர்களின் அசைவுகள் இருக்க வேண்டும் என்பதற்காகதான், இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டது. இதற்காக 1952 ஆம் ஆண்டில் திரைப்படத் தணிக்கைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. இந்தியாவில் வெளியாகும் பல்வேறு மொழிப் படங்களுக்கும் இங்குதான் சான்றளிக்கப்படுகிறது.

அந்தந்த வட்டார மொழிகளில் அல்லது பகுதிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களைப் பரிசீலித்து சான்றுகள் அளிக்க, இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுவின் மண்டல அலுவலகங்கள் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

CENSAR BOARD

இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், திரைப்படத் தணிக்கைக் குழுவில் நிரந்தர உறுப்பினர்களாகவும், குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள இலக்கிய வல்லுனர்கள், கலைத்துறையின் முக்கியப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்களை அவ்வப்போது இதன் தற்காலிக உறுப்பினர்களாகவும் இந்திய அரசு நியமிக்கிறது.

ஆனால், பெரும்பாலும் எந்த கட்சி மத்தியில் ஆட்சி செய்கிறதோ, அவர்களின் ஆதரவாளர்களோ அல்லது விசுவாசிகளோதான் திரைப்படத் தணிக்கைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். இக்குழுவில் 12 முதல் 25 உறுப்பினர்கள் வரை இடம் பெறுகின்றனர். இக்குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள்தான் திரைப்படங்களைப் பார்த்து அவற்றை வெளியிட சான்று அளிக்கப் பரிந்துரைக்கின்றனர்.

இந்தக் குழுவினர்தான் தணிக்கைக்கு வரும் திரைப்படத்தில், இந்திய அரசின் இறையாண்மை, எல்லை, பண்பாடு, அரசியல், சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மீறாத வகையில் உள்ளதா? என்பதைக் கண்காணிப்பதுடன், வன்முறை, கொடுமை, ஆபாசம், பாலியல் குறைபாடு முதலியவை இல்லாதபடி அமைந்துள்ளதா? என்றும் சரிபார்க்கிறார்கள்.

மேலும், தனிப்பட்ட அவதூறுகள், மத உணர்வுகளைத் தூண்டுதல், சடங்குகளின் பெயரால் நிகழும் தவறுகள்… ஆகியன படங்களில் இடம் பெற்றுள்ளனவா? என்றும் பார்வையிட்டு சான்றுக்குப் பரிந்துரைக்கின்றனர்.

இந்த பணிக்காக, திரைப்படத்தின் நீளத்தை பொறுத்தும், திரைபடத்தின் தன்மைகள் அடிப்படையிலும், இந்தியத் திரைப்படத் தணிக்கைக்  குழுவால் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்வையிட்டு, பொதுமக்கள் அனைவரும் பார்வையிடலாம் என்று கருதும் திரைபடங்களுக்கு “U ” (Unrestricted Public Exhibition or Universal) எனும் முத்திரையும், வயது வந்தவர்கள் மட்டும் பார்வையிடலாம் எனக் கருதும் திரைப்படங்களுக்கு “A” (Adult) எனும் முத்திரையும், வயது வந்தவர்கள் மட்டும் பொதுவாகப் பார்வையிடலாம் என்பதாகக் கருதும் திரைபடங்களுக்கு “UA” (Unrestricted Public Exhibition with parental or Universal & Adult) எனும் முத்திரையும், சிறுவர்கள் பார்வையிடலாம் எனும் கருதும் படங்களுக்கு “C” (Children ) என்றும் முத்திரை அளிக்கின்றன. இந்த முத்திரை, திரைப்படம் குறித்த அனைத்து விளம்பரங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இத்தனை சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுதான் ஒரு திரைப்படம் மக்களின் பார்வைக்கு வருகிறது.

ஆனால், ஒரு திரைப்படம் வெளிவந்த பிறகும், அந்த காட்சியை நீக்கு; இந்த வசனத்தை நிறுத்து என்று ஆளுக்கு ஆள் கூச்சலிடுவது எந்த வகையில் நியாயம்? இது சட்ட விரோதம் இல்லையா?

MERSAL -CENTRAL BOARD OF FILM CERTIFICATION

அப்படியென்றால், இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு எதற்கு? கலைத்து விட வேண்டியதுதானே?

MERSAL PRODUCER LR. P1 MERSAL PRODUCER LR

ஒரு மனிதனை மிரட்டி பணம் பறிக்கும் சமூக  விரோதிக்கும்; ஒரு பிரபல நடிகனின் திரைப்படத்தை திரையிட விடாமல் தடுத்து நிறுத்தி அவனை பணிய வைக்கும்  அரசியல்வாதிக்கும், எந்த வித்தியாசமும் இருப்பதாக எமக்கு தெரியவில்லை.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com