அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை இன்று சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது இரு தரப்பு பரஸ்பர ஒத்துழைப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது, இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தனர்.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டவல் ஆகியோருடன், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் விரிவாக கலந்துரையாடினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், பிரதமர் நரேந்திர மோதி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்தார்.
News
October 25, 2017 10:20 pm