“மெர்சல்” திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறக்கோரி வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
மனுத்தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இதுவரை பட்டியலிடப்படாததால், வழக்கை விசாரணைக்கு ஏற்க வேண்டுமென மனுதாரர் அஸ்வத்தாமன் நேற்று (26.10.2017) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் அமர்வில் முறையிட்டார்.
அதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கை இன்று (27.10.2017) விசாரிப்பதாக தெரிவித்திருந்தனர். இன்று (27.10.2017) காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com