தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை, மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி சொக்கலிங்க நாகப்பன் இன்று (27.10.2017) தலைமைச் செயலகத்தில் சந்தித்து, 13-வது சட்ட ஆணையத்தின் அறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்வின்போது சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
-ஆர்.மார்ஷல்.