இலங்கை வடமாகாணத்தில், கோவளம் லைட் ஹவுஸிற்கு 16.7 கடல் மைல் தூரத்தில், இலங்கை கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட, 5 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று (26 அக்டோபர் 2017) கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை, சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண உதவி கடற்தொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்கள் 5 பேரும் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுக்குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று (27.10.2017) கடிதம் எழுதியுள்ளார்.
-என்.வசந்த ராகவன்.
இலங்கையில் 5 இந்திய மீனவர்கள் கைது!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News
October 27, 2017 10:29 pm