அக்டோபர் 26 ஆம் தேதி இலங்கைக்கு சென்ற இந்திய கடற்படையினர், இலங்கை மாட்டுக்ளியாவில் உள்ள க்ரோ தீவு கடற்கரையில் நேற்று (அக்டோபர் 28) துப்புரவுப்பணிகளை மேற்கொண்டனர். கடற்கரையோரப் பகுதிகளில் தேங்கிக் கிடந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தையும் பொருக்கி சுத்தம் செய்தனர்.
இதில் இந்திய கடற்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் இளம் மாலுமிகள் உள்பட 35 நபர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், ஸ்ரீலங்கா கடலோர காவல்துறை, இலங்கை போலிஸ் மற்றும் இலங்கை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திலுள்ள உறுப்பினர்கள் உள்பட 25 நபர்கள் இப்பணியில் பங்கேற்றனர்.
தேசத்தை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ; அதைவிட இயற்கையை பாதுகாப்பதுதான் இன்றைய அதிமுக்கியம் என்பதை, அந்நிய நாட்டின் கடற்கரையை சுத்தம் செய்து, இந்த உலகத்திற்கு முன் உதாரணமாய் திகழும் நம் இந்திய கடற்படையினரின் சேவை உண்மையிலுமே பாராட்டத்தக்கது.
-என்.வசந்த ராகவன்.
இலங்கை கடற்கரையை சுத்தம் செய்த இந்திய கடற்படையினர்!
News
October 29, 2017 10:05 pm