முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி மற்றும் 55-வது குருபூஜையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை பசும்பொன் கிராமத்தில் முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், தமிழக அமைச்சர்கள், சட்ட மன்ற மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்பட ஏராளமானோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
-கே.பி.சுகுமார்.