கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு இன்றோடு ஓராண்டு காலம் நிறைவடைவதையொட்டி, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் இந்தியா முழுவதும் இன்று கருப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில திமுக சார்பிலும், அதன் தோழமைக் கட்சிகளின் சார்பிலும் கண்டன ஆர்பாட்டங்கள் இன்று நடைபெற்றது.
மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
-ஆர்.அருண்கேசவன்.