15-வது ‘ஆசியான்’ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா சென்றடைந்தார். மணிலா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு, அந்நாட்டு அதிகாரிகளும், அங்குள்ள இந்திய வம்சா வழியினரும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்டே, சீன பிரதமர் லீ கெகியாங், ரஷ்ய பிரதமர் ட்மிட்ரி மெட்வேதேவ், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்டோரை இந்திய பிரதமர் நரேந்திர மோதி சந்தித்தார்.
-ஆர்.மார்ஷல்.