இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்பில், பருத்தித்துறை கலங்கரை விளக்கின் வடபகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 10 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று இரவு (நவம்பர் 15) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் மீன் பிடி உபகரணங்கள் அனைத்தும், காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு, அதன்பின் சட்ட நடவடிக்கைகாக யாழ்ப்பாண உதவி கடற்தொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.