திருவெறும்பூர் ஆர்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி!

RSK SCHOOL.1 RSK SCHOOLRSK SCHOOL3

திருச்சி, திருவெறும்பூர் அருகே பெல் (BHEL) வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளியில் 4 மாவட்டங்களில் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையேயான இரண்டு நாள் அறிவியல் கண்காட்சியை பெல் (BHEL) மனித வளத்துறை பொது மேலாளர் ஜெயக்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

RSK SCHOOL2

இவ்விழாவில் திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, சென்னை ஆகிய 4  மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஸ்மார்ட் சிட்டி பற்றி பல்வேறு படைப்புகள், சோலார் லைட், காற்றாலை மூலம் மின்சாரம்,  மழையில் மின்சாரம் சேமித்தல், விவசாயம்… உள்ளிட்ட பல்வேறு வகையான 300 படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

இதில் பெல் (BHEL) ஆர்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 1,100 மாணவ, மாணவிகளும், மற்ற மாவட்டங்களை சேர்ந்த 100 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இதில் ஆர்.எஸ்.கே. பள்ளி ஒருங்கிணைப்பாளர் மாதரசி ஆலோசனைப்படி, ஓவிய ஆசிரியர் திருக்குமரன் மற்றும் சென்னையை சேர்ந்த ஜெகன் என்பவர் உதவியுடன், 31 மாணவ, மாணவிகள் சேர்ந்து பறக்கும் செயல் திட்ட விமானம் பறக்கவிடப்பட்டது. அந்த விமானத்திற்கு ஜெட் ஜேஎஸ் 17 என பெயர் சூட்டப்பட்டது.

RSK SCHOOL.4

இந்த அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள படைப்புகளில் சிறந்த மூன்று படைப்புகள் தேர்ந்தெடுக்கபட்டு பரிசுகள் வழங்கப்படும். மேலும், இந்தப் போட்டியில் கலந்து கொண்ட 1,200 மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களும்,கோப்பையும் வழங்கப்பட இருக்கிறது.

இந்த விழாவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியியல் துறை தலைவர் கவிதா, பெல் மனிதவளத்துறை உதவி பொது மேலாளர்கள் சமது, முரளி, பாரதிதாசன் பல்கலை கழகத்தைச் சேர்ந்த திருநாளசுந்தரி, ஆர்.எஸ்.கே பள்ளி நிர்வாகி பாப்பன், பள்ளி முதல்வர் மாரியப்பன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி வில்லட் ஓவியா மாநிலத்திலேயே “இளம் விஞ்ஞானி” என்று பெயர் பெற்றதும் இந்த பள்ளின் சிறப்பு அம்சமாகும்.

-ஆர்.சிராசுதீன்.