கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா!

DSC_0000063 DSC_0000064

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில், ஒன்றிய அளவிலான 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான “கலைத்திருவிழா” இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமசந்திரன் கலந்துக்கொண்டு கலைத்திருவழாவைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

இதில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ்.கந்தசாமி, செய்யாறு துணை ஆட்சியர் கிருபாகரன், ஆரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அ.இராசேந்திரன், ஆரணி கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வி.புருசோத்தமன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பூ.துரை மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

-மு.ராமராஜ்.
-ச.ரஜினிகாந்த்.