ஒடிஷா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கின் தொகுதியான ஹிஞ்சிலி தொகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் 02.08.2013 அன்று வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி செத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன்னதாகவே உணவில் பல்லி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்திய கல்வி துறை அதிகாரிகள் அப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக பிஸ்கட் மற்றும் வாழைப்பழங்களை தந்து பசியாற்றினர்.
இரு நாட்களுக்கு முன்னர் இதே தொகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் மண் புழு நெளிந்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.