ஹைதராபாத்தில் நடைப்பெற்ற ஆந்திரா மற்றும் தெலுங்கானா வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில், குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு இன்று கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
இதில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன், தெலுங்கானா துணை முதல்வர் முகமட் மஹ்மூத் அலி மற்றும் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு கலந்துரையாடினார். குழுவாக படமும் எடுத்துக்கொண்டார்.
-சி.வேல்முருகன்.