ஏற்காட்டில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி ஆய்வு!- மாற்றுத்திறனாளியின் தாயாருக்கு உடனே வேலை வழங்க உத்தரவு!

?????????????????????????????????????????????????????????????? ??????????????????????????????? ???????????????????????????????

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் படகு இல்ல ஏரி, மான் பூங்கா, அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, சேர்வராயன் குகை கோவில் உள்ளிட்ட இடங்களை சேலம் மாவட்டம் ஆட்சியர் ரோகினி இன்று காலை 11 மணி முதல் ஆய்வு செய்தார்.

???????????????????????????????

அப்போது, தனது கணவர் வீட்டை விட்டு ஓடி விட்டதாகவும், மாற்றுத்திறனாளி மகனுடன் வேலையின்றி தவிப்பதாகவும் ஏற்காடு முருகன் நகர் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்ற பெண், மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகினியிடம் கண்ணீர் மல்க கூறினார்.

அந்த பெண்ணுக்கு ஏற்காடு அண்ணா பூங்காவில் உடனடியாக இன்று முதலே வேலை வழங்கும்படி தோட்டக்கலைத் துறையினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகினி உத்தரவிட்டார்.

ஆய்வு பணிகளை முடித்த பின்னர், மாலை 3 மணிக்கு வருவாய், ஊரக வளர்ச்சி, வனத்துறை, சுற்றுலா வளர்ச்சி, காவல் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

ஏற்காட்டில் உள்ள அனைத்து பகுதியிலும் குப்பைத் தொட்டிகள் வைத்தல், சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்குதல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஏற்காட்டில் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர், அந்த கடைகளை அகற்ற உள்ளதாகவும் கூறினார்.

சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஏற்காட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் நவீனமயமாக்கப்பட உள்ளதாகவும், இந்த பணிகள் அடுத்த வாரத்திலேயே தொடங்கப்பட உள்ளதாகவும், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகினி  தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகினி ஆலோசனை கூட்டத்தை முடித்து காரில் ஏறும் போது, ஏற்காடு லாங்கில் பேட்டை கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்குள் தனியார் தங்கும் விடுதி செயல்படுவதாகவும், இதனால் கிராம மக்கள், பெண்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாகவும் மனு ஒன்றினை அந்த கிராம இளைஞர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகினி, இதுக்குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிசென்றார்.

 -நவீன் குமார்.