அசோக் குமார் தற்கொலை விவகாரம்! பைனான்சியர் அன்பு செழியன் மீது கூறப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்…! –மறுப்பு தெரிவிக்கும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மேலாளர்!

Ashok kumar 1

அசோக் குமார்.

Ashok kumar

SASIKUMAR

நடிகர் சசிகுமார்.

நடிகர் சசிகுமாரின் நெருங்கிய உறவினரும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியுமான அசோக் குமார், கடன் பிரச்னை காரணமாக 21.11.2017 மதியம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பைனான்சியர்  அன்புச்செழியன்.

பைனான்சியர் அன்புச்செழியன்.

பைனான்சியர் ஜி.என்.அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததாலேயே தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அசோக் குமார் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் உள்ள விஷயங்களை நமது வாசகர்களின் பார்வைக்காக அப்படியே இங்கு பதிவு செய்துள்ளோம்:
Asok lr1Asok lr

‘என்னை கோழை, சுயநலக்காரன் என்று எதுவேனும் சொல்வீர்கள். எனக்கு இரண்டு வழிதான் இருந்தது. 1. கொலை, 2. தற்கொலை. கொலைகாரன் ஆகும் தைரியம் இருந்தாலும், கொலை செய்யப்படுபவர் குடும்பம் பாவம்.

நல்ல பெற்றோர், நல்ல உடன்பிறந்தோர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் இருந்தும், நான் அவர்களுக்கு நல்ல மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, தகப்பனாகவோ இல்லை.

எனக்கு, சசிகுமார் கடவுளைவிட நல்ல முதலாளியாக இருந்தான். எனக்கு எல்லா சுதந்திரமும், அதிகாரமும் கொடுத்தான். நான் கம்பெனியை கடனில் நிறுத்தியுள்ளேன். சசிக்கு நல்லது மட்டுமே செய்யத் தெரியும். ஆனால், அவனுக்கு யாரும் நல்லது செய்யவில்லை.

இதுவரை பத்து ஆண்டுகளில் எங்கள் எல்லா தயாரிப்பு படத்தையும் சரியான தேதியில் வெளியிட்டோம். நாங்கள் செய்த பெரிய பாவம், ஜி.என்.அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது. வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த ஏழு வருடங்கள் வாங்கியவர். கடந்த ஆறு மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார். வேற்று ஆட்களை வைத்துக்கொண்டு என் வீட்டுப் பெண்கள், பெரியவர்களைத் தூக்கி வருவேன் என்றார். யாரிடம் உதவி கேட்பது? அதிகார வர்க்கம் (காவல்துறை), அரசாங்கம் ஆள்வோரின் பெரும்புள்ளிகள், சினிமா பெடரேஷன் தலைவர் செல்வின் ராஜ் என சகலமும் அவர் கையில். அவரை ஒன்றும் செய்ய முடியாது. கடவுளுக்கு, அவரைத் தண்டிப்பது மட்டும் வேலை இல்லையே…

எனது உயிரினும் மேலான சசிகுமாரா… என்னால், உன்னை இவர்கள் எல்லாம் சித்ரவதை பண்ணுவதை என்னால் சகிக்க முடியவில்லை. உன்னை அவர்களிடம் இருந்து மீட்பதற்குத் திராணி இல்லாததால்தான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு. நீ ரொம்ப நல்லவன், நீ நல்லா இருக்கணும். என் சாவை வைராக்கியமாக எடுத்துக்கொள். என்னைப்போல் நீ கோழை ஆகிவிடாதே.

எத்தனையோ பேரை வாழவைத்த நீ, கண்டிப்பாக நல்லபடியாக வாழவேண்டும். இந்த சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னை விட்டுப் போகிறேன். மன்னித்துவிடு சசி, என்னை நினைத்துப் பார்க்காதே. நீ நிறைய உழைத்திருக்கிறாய். நீ சுயம்பு. என்னைக் காப்பாத்தாத கடவுள், உன்னையும், நமது குடும்பத்தையும் காப்பாற்றுவான். என்னால் அன்புச்செழியன் போன்ற சூழ்ச்சிக்காரர்களையும், ஈவு இரக்கமற்றவர்களையும் எதிர்கொள்ள முடியவில்லை.

எனக்கு வாழத் தகுதி இல்லையா? வாழ வழி இல்லையா? என்று தெரியவில்லை. அதனால், எனது சாவை நானே தற்கொலை மூலம் தேடிக்கொள்கிறேன்.

அப்பா, அம்மா, சின்னத்தாயி, ராஜப்பா, வனிதா, அர்ச்சனா, சக்தி, ப்ரார்த்தனா, சித்து, சாத்விக் நீங்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டாம். சட்டென்று மறந்துவிடுங்கள். இதுவரை உங்களுக்கு எதுவும் செய்யாத என்னை, உங்கள் நினைப்பில் இருந்து தூக்கி எறியுங்கள். 43 வருஷம் யாருக்கும் பயன் இல்லாத ஒரு ஜந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். சசியை பார்த்துக் கொள்ளுங்கள். அவன் பாவம், அவன் குழந்தை.

எதிலும் ஜெயிக்காத நான், எனது தற்கொலையில் தோற்க மாட்டேன் என்று நம்புகிறேன்’. இப்படிக்கு பா. அசோக் குமார் என்று கையெழுத்திட்டு, அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் முழுப்பெயரையும் எழுதியுள்ளார்.

பின்னர், முக்கியக்குறி போட்டு பின்வருபவற்றை அசோக் குமார் எழுதியிருக்கிறார். ‘யாரேனும் ஜி.என்.அன்புச்செழியனுக்கு சொல்லுங்கள். அதிகாரம், அரசு எல்லாவற்றையும் அவர் சமாளிக்கலாம். தனியே இருக்கையில் என்றேனும் தனது மனசாட்சியுடன் பேசச் சொல்லுங்கள். (இந்தக் கடிதம் கூட வெளியே தெரியாமல் அழிக்கும் வித்தை அவருக்குத் தெரியும். நீடூழி வாழ்ந்துவிட்டு அவர் மட்டும் இருக்கட்டும்)’ என்று எழுதி, மறுபடியும் அசோக் குமார் கையெழுத்திட்டுள்ளார்.

அதற்கு கீழே, (என் உடம்பில் உள்ள தழும்புகள் கடந்த சில காலமாய் எனக்கு நானே ஏற்படுத்துக் கொண்டது) என்று குறிப்பிட்டு, அதன் கீழும் தமிழில் அசோக் குமார் கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில், பைனான்சியர்  அன்புச்செழியன் மீது, இயக்குநர் சுசீந்திரன் உள்பட சினிமா தொழில் சம்மந்தப்பட்ட பலரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

இயக்குநர் சுசீந்திரன்.

இயக்குநர் சுசீந்திரன்.

N.SUSEENTHARAN LRN.SUSEENTHARAN LR. 1

 GAUTHAMVASUDEVMENON

அசோக்குமார் எழுதியதாக சொல்லப்படும் கடிதம் உண்மையில் அவர் எழுதி வைத்தது தானா?நாங்கள் அசோக்குமாருக்கு எந்தவிதமான பண வரவு செலவும் செய்யவில்லை. சசிகுமார் மட்டுமே எங்களிடம் பணம் பெற்றுள்ளார் என்று, தற்போது கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மேலாளர் ஆர்.முரளி என்பவர்  எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.

Gopuram films manager murali Statementஇதில் யார் சொல்வது உண்மை? சட்டம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இதுக்குறித்து விரிவான புலண் விசாரணைக்கு தமிழக அரசு உடனே உத்தரவிடவேண்டும். குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கூண்டோடு பிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்தி  தண்டிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் இதுப்போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் முற்றிலும் தடுக்க வேண்டும். இல்லையென்றால், மனித உயிர்களுக்கு இங்கு மதிப்பில்லாமல் போய்விடும்.  

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com