இரட்டை இலைச் சின்னம் கே.பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு!- இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ உத்தரவின் உண்மை நகல்.

EPS -OPS MEET 23.11.2017EPS -OPS MEET 23.11.2017 BOPS1OPSEPS -OPS MEET 23.11.2017 A

amma samathiAIADMK 'Two Leaves

“இரட்டை இலைச் சின்னம்” தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கி, இந்திய தேர்தல் ஆணையம் இன்று (23.11.2017) அதிகாரபூர்வமாக உத்தரவிட்டுள்ளது. 83 பக்கங்கள் கொண்ட  இந்திய தேர்தல் ஆணையத்தின் இறுதி உத்தரவின் உண்மை நகலை, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

AIADMK 'Two Leaves' Symbols ECI JUDGEMENT

இந்திய தேர்தல் ஆணையத்தின் இறுதி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

இரட்டை இலையை முடக்கி மார்ச் 22-ல் பிறப்பித்த உத்தரவை திரும்பபெறுகிறோம்.

தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி அணிக்கு உள்ள பெரும்பான்மையின் அடிப்படையில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதுஅந்த அணிக்கு 111 எம்.எல்..க்கள் மற்றும் 42 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது.

டி.டி.வி தினகரன் அணிக்கு 20 எம்.எல்..க்கள் மற்றும் 6 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது.

இதனால், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையிலான அணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட .தி.மு..வாக கருத்தப்படுகிறது.

கட்சியின் லட்சக்கணக்கான உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்த முடியாது. பொதுக்குழுவையே தொண்டர்களின் பிரதிநிதிகளாக கருத முடியும்.

பொதுக்குழு உறுப்பினர்கள் என்று பார்க்கும் பட்சத்தில் 2,128 பேர் முதலமைச்சர் கே.பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக உள்ளனர். 251 பேர் தினகரன் அணிக்கு ஆதரவாக உள்ளனர்

மார்ச் மாதம் கூடிய பொதுக்குழுவில் 1,912 உறுப்பினர்கள் சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருந்த நிலையில்செப்டம்பர் மாதம் கூடிய பொதுக்குழுவில் உறுப்பினர்களின் நிலைப்பாடு மாறியுள்ளது.

செப்டம்பர் மாதம் கூடிய பொதுக்குழுவில் எந்த விதிமீறலும் இல்லை. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும்.

முதலமைச்சர் கே. பழனிச்சாமி அணி மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளதாக 10 பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த புகார் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜெ.தீபா, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் இல்லை என்பதால் அவர் இரட்டை இலை சின்னத்தையோ, அ.தி.மு.க. கட்சியின் பெயரையோ உரிமை கோர முடியாது. இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 325 பிரமாண பத்திரங்கள் போலி என கண்டறியப்பட்டுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com