திருவண்ணாமலை தீபத்திருவிழா!- செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் 200 பணியாளர்களுக்கு சீருடை!

chengam

திருவண்ணாமலையில் புகழ்மிகு கார்த்திகை தீபவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 30-ந் தேதி மகா தேரோட்டமும், டிசம்பர் மாதம் 2-ந் தேதி மகா தீபமும் நடைபெற உள்ளது. இதையொட்டி தினசரி நடைபெறுகின்ற பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவில், சாமி தூக்கும் மற்றும் தேர் இழுக்கும் 200 தன்னார்வ பக்தர்களுக்கும், இளைஞர்களுக்கும் டி-சர்ட் மற்றும் வேட்டி சீருடைகளை செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் அக்ரி.வெங்கடாஜலபதி வழங்கினார். தொடர்ந்து இது 5-வது ஆண்டாக ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் வழங்குவது குறிப்பிடதக்கது.

செங்கம் சரவணக்குமார்.