திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பின்புறம், ஒரு கூட்ட அரங்கு உள்ளது. அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. மது அருந்தும் இடமாகவும், பயன்படுத்தப்பட்ட மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிறது. இரவு நேரங்களில் சட்ட விரோத சம்பவங்கள் அங்கு நடைப்பெறுகிறது.
அலுவலக வளாகத்தைத் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும், வைத்திருக்க வேண்டிய ஊராட்சி ஒன்றிய நிர்வாகம். அலட்சியப்போக்குடன் இருந்து வருகிறது.
அனைத்து கிராமங்களிலும் “தூய்மை இந்தியா” திட்டத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் இவர்களுக்கு, தங்களின் அலுவலக வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்கத் தெரியவில்லை. அப்படியானால், இவர்களுக்கு யார் அபராதம் விதிப்பது?
சம்மந்தப்பட்ட துறைச் சார்ந்த உயர் அதிகாரிகள் இதை சரி செய்வார்களா?
–ச.ரஜினிகாந்த்.
–மு.ராமராஜ்.