இலங்கை கடற்படையினருக்கு இன்று காலை (நவம்பர் 29) கிடைத்த அவசர தகவலின் அடிப்படையில், இலங்கை காலி துறைமுகத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிற்கு விரைந்தனர்.
அப்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தாவின் துறைமுகத்திலிருந்து, சிங்கப்பூர் சென்ற ஒரு கொள்கலன் (Container Ship) கப்பலில் பணியாற்றி வந்த பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு, திடீரென்று தீ காயம் ஏற்பட்டு அங்கு அவதிப்படுவது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட அந்த இளைஞரை கொள்கலன் (Container Ship) கப்பலில் இருந்து உடனடியாக மீட்டு, காலி துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்து, முதலுதவி அளித்து, மருத்துவ சிகிச்சைக்காக இலங்கை கராபிடியா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
-என்.வசந்த ராகவன்.
கப்பலில் காயங்களுடன் அவதிப்பட்ட பிலிப்பைன் நாட்டு இளைஞரை காப்பாற்றிய இலங்கை கடற்படையினர்!-படம் & வீடியோ
News
November 29, 2017 10:51 pm