தென் மாவட்டங்களில் கன மழை!- கன்னியாகுமரி மாவட்டத்தை கலங்கடித்த சூறைக்காற்று…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்று1

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் சூறைக்காற்றுடன் கன மழைபெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் வருவாய், தீயணைப்பு, காவல் துறையினர் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

-ஜி.கஜேந்திரன்.