பயங்கரவாதிகள் துணையுடன் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் : இந்திய ராணுவ வீரர்கள் படுகொலை!

pkisthan  attackகாஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, பாகிஸ்தான் ராணுவத்தினர் பயங்கரவாதிகள் துணையுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவினார்கள். அப்போது இந்திய ராணுவ வீரர்கள் 6 பேர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினர் மறைவான இடத்தில் இருந்தபடி, இந்திய வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்திய வீரர்களும் திருப்பி தாக்கினார்கள். ஆனால், குறைவான எண்ணிக்கையில் இருந்ததால், அவர்களால் தக்க பதிலடி கொடுக்க முடியவில்லை.

இந்த தாக்குதலில், இந்திய ராணுவத்தின் பீகார் ரெஜிமெண்ட் 21-வது படைப்பிரிவை சேர்ந்த இளநிலை ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட 5 வீரர்கள் பலியானார்கள். மற்றொரு வீரர் படுகாயம் அடைந்தார். இதனால் எல்லைப்பகுதியில் பதற்ற நிலை உருவாகி உள்ளது.

ச்சம்பவத்தை தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை தூதர் மன்சூர் அகமதுகானுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சக இணைச்செயலாளர் ருத்ரேந்திர தாண்டன் சம்மன் அனுப்பி வரவழைத்தார். பின்னர் இந்தியா சார்பில், இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் தகவல் அவர் மூலமாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

Leave a Reply