கன்னியாகுமரியில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இரவு ஆய்வு செய்தார்.
அங்கு அரசு விருந்தினர் மாளிகையில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. தேடும் பணியில் விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை தீவிரமாக இறங்கி உள்ளது.
மீனவர்களை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள இந்திய கடற்படை கப்பல்கள்:
கடலுக்குள் சிக்கி தவிக்கும் மீனவர்களை பத்திரமாக மீட்டு அவர்களது குடும்பத்தாருடன் சேர்க்கும் வரை தேடுதல் பணி தொடரும் என்று, மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-சி.வேல்முருகன்.