திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து!

IMG_20171205_093233 IMG_20171205_093219

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு ஏற்றி சென்றுக்கொண்டிருந்த TN-59 AJ 0109 என்ற எண் உள்ள லாரி, திருச்சி காவிரி பாலத்திற்கும், பழைய பால் பண்ணைக்கும் இடையில் ஏ.ஆர்.கே நகர் அருகே இன்று காலை மேம்பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த போது, லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் அமைக்கப்பட்டிற்கும் தடுப்பு தகரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், தேசிய நெடுஞ்சாலை துறையினரின் மீட்பு வாகனத்தின் உதவியுடன், லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர்.

-கே.கங்காதரன்.