17695_72_K Vishal krishna
17695_72 VISHAL
நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், முன்மொழிந்தவர்களில் இரண்டு பேரின் கையெழுத்துகள் தங்களது இல்லை என்று தெரிவித்ததால், நடிகர் விஷால் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
விஷாலை முன்மொழிந்து முதல் கையெழுத்துப்போட்ட சுமதி மற்றும் ஒன்பதாவது கையெழுத்து போட்ட தீபன் ஆகிய இருவருமே ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்கள்தான்.
இதோ அதற்கான ஆதாரம்:
வேட்பு மனுவில் முன்மொழிந்து கையெழுத்திட்டவர்களை மிரட்டி, தனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்துள்ளனர். முன்மொழிந்தவர்களை மிரட்டப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக நடிகர் விஷால் தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தார். தேர்தல் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.
நடிகர் விஷால் வெளியிட்ட ஆடியோ ஆதாரம்.
முறையாக விசாரணை நடத்த வேண்டும், அது வரை என் மனு மீது நடவடிக்கை எடுக்க கூடாது என நடிகர் விஷால் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com