திருச்சி, திருவெறும்பூர் அருகே சிறப்பு மனுநீதி நாள் முகாமில் கலாட்டா! படம் பிடித்த தொலைக்காட்சி நிருபர்களின் கேமராவை தட்டிவிட்ட அதிமுக பிரமுகர்!-கலெக்டரின் காரை மறித்த விவசாயிகள்….!

S4830014S4830026S4830032 S4830029 S4830028

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் மற்றும் திருச்சி மக்களவை உறுப்பினர் குமார் சான்சத் ஆதர்ஸ் கிராமயோஜனா திட்டத்தின் மூலம் அந்த கிராமத்தை தத்தெடுக்கும் விழா இன்று நடைப்பெற்றது. 

அப்போது விழாவில் பொதுமக்களை அழைத்து ஊரில் என்ன தேவை? என்ன குறைகள் உள்ளது என்று பேச சொன்னார்கள்.

அப்போது அதேப்பகுதியை சேர்ந்த விவசாயி சித்திரமூர்த்தி குறைகளை மைக்கில் சொல்வதற்காக சென்றப்போது, அவரை பேசவிடாமல் திருச்சி மக்களவை உறுப்பினர் குமார் பேசினார்.

அதனால் கோபமடைந்த சித்திரமூர்த்தி விழா மண்டபத்தின் மத்தியில் வந்தவர் விவசாயிகள் குறைகளை கூறவிடாமல் நீங்கள் பேசுவது சரியில்லை, நான் கலெக்டர் ராசாமணியை மறிப்பேன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன் என்று கூறி கூச்சலிட்டார். இதனால் அவரிடம் அதிமுகவினர் தகறாறு செய்தனர்.

அதை கேப்டன் டிவி, நியூஸ் 18 தமிழ்நாடு, ராயல் டிவி ஆகிய தொலைகாட்சி நிருபர்கள் வீடியோ எடுத்தப்போது, திருவெறும்பூர் அதிமுக கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் கும்பகுடி கோவிந்தராஜன், தொலைகாட்சி நிருபர்களின் கேமராவை தட்டிவிட்டு, தகாத வார்த்தைகளால் நிருபர்களை திட்டினார். இதுக்குறித்து தொலைகாட்சி நிருபர்கள் குமாரிடம் கேட்டப்போது, குமார் என்ன கேட்கிறோம் என்று தெரியாதது போல் குமார் நிருபர்களிடம் கத்தினார். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டது. இதனால் நிருபர்கள் விழாவை புறக்கணித்து வெளியேறினார்கள்.

பின்னர் கலெக்டர் வந்தால் காரை மறிப்பேன் என்று சிதிரமூர்த்தி கலெக்டரின் காரின் முன்னால் நின்றுகொண்டார். அவரிடம் வந்த கலெக்டர் ராசாமணி,  விவசாயி சித்திரமூர்த்தியை மிரட்டும் தோரணையில் பேசிவிட்டு சென்று விட்டார்.

இச்சம்பவம் அந்தப்பகுதி விவசாயிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ஆர்.சிராசுதீன்.