திறந்த வெளிகளில் கொட்டப்படும் நச்சு கழிவுகள்!

3

லோட்டஸ் புட்வேர் கம்பெனி (Lotus foot wear company) திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாங்கால் சிப்காட் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கம்பெனியின் நச்சு கழிவுகளை மானம்பதி என்னும் ஊரில் கொட்டுகிறார்கள். இது போன்று சுற்றியுள்ள பல ஊர்களில் சாலை ஓரங்களில் கழிவுகளை கொட்டுகிறார்கள்.

மழை பெய்தாலும், காற்று வீசினாலும் அப்பகுதி முழுவதும் நாற்றமெடுக்கிறது. இதனால் நிலத்தடி நீரும் மாசடைகிறது. மேலும், சுற்றுச் சூழலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

இதை கண்காணித்து தடுக்கவேண்டிய சம்மந்தப்பட்ட அதிகாரிகள், தனிப்பட்ட ஆதாயத்தைப் பெற்றுக்கொண்டு மௌனமாக இருக்கிறார்கள்.

-ச. ரஜினிகாந்த்.
-மு. ராமராஜ்.