பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து, பாரதிய ஜனதா கட்சி மக்களவை உறுப்பினர் ராஜினாமா!

NANA PATOLE -pm modi1NANA PATOLE -pm modiNANA PATOLE

NANA PATOLE  DETAILS

NANA PATOLE  DETAILS1

பாரதிய ஜனதா கட்சி கொள்கை முடிவுகளையும், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசின் நடவடிக்கைகளையும், தொடர்ந்து விமர்சித்து வந்த, மகாராஷ்டிர மாநிலம், பந்த்ரா கோண்டியா தொகுதி மக்களவை உறுப்பினர் நானா பட்டோலி @ நானாபாவ் ஃபால்குன் ராவ், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகிக்கொள்வதாக மக்களவை சபாநாயகருக்கு தனது ராஜினாமா கடிதத்தை இன்று (08.12.2017) அனுப்பியுள்ளார்.

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் நாளை (09.12.2017) காலை முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்கவிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து, பாரதிய ஜனதா கட்சி மக்களவை உறுப்பினர் ஒருவர் பதவி விலகியிருப்பது, பாரதிய ஜனதா தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com