நிலுவைத் தொகை ரூ.200 கோடியை பொங்கலுக்குள் வழங்க வேண்டும்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி அனைத்து ஒப்பந்ததாரர்கள் சங்க 28 -வது மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ரமேஷ் தலைமையிலும், மாநில செயலாளர் அருள்சாமி முன்னிலையிலும் இன்று நடைப்பெற்றது.

கூட்டத்தில் நடப்பு நிதியாண்டில் மட்டும் நிறைவேற்றப்பட்ட பராமரிப்பு குடிநீர் திட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்காமல் நிலவையில் உள்ள, ரூ.200 கோடியை வரும் பொங்கலுக்குள் அரசு வழங்க வேண்டும்.

வரவுள்ள 2018 – 2019 ஆம் நிதியாண்டில் நடைபெற உள்ள கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகளுக்கு திட்ட மதிப்பீட்டை பிரித்து, பிரித்து வழங்க வேண்டும்.

தமிழகத்தில் நடைப்பெற்று கொண்டிருக்கும் அனைத்து வகையான குடிநீர் திட்ட பணிகளையும், இதற்கென்று உருவாக்கப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும். கூட்டத்தில் மேற்கண்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

-நவீன் குமார்.