சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தோட்ட தொழிலாளர் சங்க மாவட்ட பேரவை கூட்டம், சங்க துணை தலைவர் செல்லப்பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது. மாநில செயலாளர் கோபிக்குமார் சிறப்புரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காடு ஒன்றிய செயலாளர் நேரு வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டத்தில் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
கேரளாவில் தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு மற்றும் வீட்டு மனை பட்டா வழங்கியது போல், தமிழக அரசும் வழங்க வேண்டும்.
தோட்ட தொழிலாளர்களுக்கு பி.எப், கிராஜீவிட்டி, சம்பளத்துடன் கூடிய விடுப்பு, மருத்துவ வசதி உள்ளிட்டவை வழங்க வேண்டும்.
ஜெம் மற்றும் கல்லேரி மலை எஸ்டேட்களில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
மாரமங்கலம் கிராமத்தில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டியும், ஏற்காட்டின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏற்காடு வரும் பள்ளி மாணவர்களுக்கென தனி பஸ் வசதி செய்து தர வேண்டும்.
மேலும், ஏற்காட்டில் அரசு போக்குவரத்து பணிமனைக்கு இடம் ஒதுக்கப்பட்டும் பணிமனை கட்டாததை வன்மையாக கண்டித்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் புதிய மாட்ட தலைவராக கண்ணாடி ராஜீம், செயலாளராக இளங்கோவும் தேர்வு செய்யப்பட்டனர்.
-நவீன் குமார்.