ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மதுரவாயல் சட்டம் – ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி வீரமரணம்!

காவல் ஆய்வாளர் பெரியபாண்டி

Periyapandi shot காவல் ஆய்வாளர் பெரியபாண்டி.

Periyapandi

சென்னை ‘மகாலட்சுமி தங்க மாளிகை’ என்ற நகைக்கடையில் கடந்த நவம்பர் 16-ம் தேதி அன்று கொள்ளையடித்து விட்டு, ராஜஸ்தான் மாநிலத்திற்கு தப்பிச்சென்ற நாதுராம், தினேஷ்சவுத்ரி என்ற இரு கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற, மதுரவாயல் சட்டம் – ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி, ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில், ராம்பூரா கிராமத்தில் இன்று (13.12.2017) அதிகாலை 2.30 மணியளவில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி சூடுப்பட்டவுடன் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு, அதன் காரணமாக ஆய்வாளர் பெரியபாண்டி மயக்கமடைந்து. அதன் பின்னர் அவர் இறந்துள்ளார்.

கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெரியபாண்டியுடன் சென்ற கொளத்தூர் சட்டம் – ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர், கடுமையான காயங்களை அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தகவல் அறிந்ததும் பாலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் மற்றும் இதர மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர் .

இச்சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தைச் சேர்ந்த நாதுராம் (வயது28) மற்றும் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் சவுத்ரி (வயது 20) ஆகிய இருவரையும் பாலி மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு பின்னர் தப்பியோடியவர்களை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது.

இது சம்மந்தமாக மேலும் விபரங்களுக்கு:

தீபக் பார்கவ்,

பாலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,

தொலைப்பேசி எண்கள்: 2932251531, 2932251532

அலைபேசி: 9530419769, 2932251531

தொலை நகல்: 2932251533

மின் அஞ்சல்:sp.pali@rajpolice.gov.in   

  -எஸ்.சதிஸ் சர்மா.