கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி டெல்லி பாராளுமன்ற வளாகத்திற்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேர் மாறுவேடத்தில் நுழைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினார்கள். பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற இவர்களை பாதுகாப்பு படைவீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 5 பாகிஸ்தான் தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தின்போது தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டதில் பாதுகாப்புபடை வீரர்கள் 8 பேர் வீரமரணம் அடைந்தனர். தோட்டப்பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரும் உயிரிழந்தார். இந்த தாக்குதல் சம்பவத்தின் 16 -வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் மேற்கண்ட 9 பேரின் புகைப்படங்களும் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில், இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோதி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com