சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதனால் அந்தத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் இருக்கும் அனைத்து தொழில் நிறுவனங்கள், அரசு கட்டுப்பாட்டுக்குள் வரும் அமைப்புகள், அனைத்து கல்வி நிலையங்களும் அன்று மூடப்படவேண்டும். மேலும், சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் வசிக்கும் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
-ஆர்.மார்ஷல்.