ராஜஸ்தான் மாநில நகைக் கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டப்போது வீர மரணம் அடைந்த மதுரவாயல் காவல் ஆய்வாளர் S.பெரியபாண்டியன் குடும்பத்தினருக்கு, சென்னை மாநகர காவல் அதிகாரிகள் உதவ விரும்பியதால், உதவியை ரொக்கமாக வசூலிப்பதை தவிர்த்து வங்கி கணக்கில் செலுத்த ஏதுவாக தனி வங்கி கணக்கு ஒன்று துவக்கப்பட்டது.
இது சென்னை மாநகர காவல் அதிகாரிகளுக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. இவ்விவரம் சென்னை மாநகர காவல் துறையினர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டது.
இந்த விவரம் தவறான புரிதலின் காரணமாக பொது மக்களிடம் S. பெரியபாண்டியன் குடும்பத்தினருக்கு உதவி கோருவது போல பரப்பப்பட்டு விட்டது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மிகப்பெரிய மனதுடன் உயிரிழந்த காவல் ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ஒரு கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும், ஆய்வாளரது மகன்களின் கல்விச் செலவையும் தமிழக அரசு ஏற்குமென்று அறிவித்துள்ளார்.
சென்னை மாநகர காவல் அதிகாரிகள் நல்லெண்ணம் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில், துவக்கப்பட்ட வங்கி கணக்கு மூடப்பட்டுவிட்டது. காவல் அதிகாரிகள் உட்பட யாரும் இவ்வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டாமென்று, சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, சென்னை மாநகர காவல் அதிகாரிகளால் துவக்கப்பட்ட வங்கி கணக்கு மூடப்பட்டது! -சென்னை மாநகர காவல் துறை அறிவிப்பு.
News
December 15, 2017 1:43 pm