சேலம் மாவட்டம், ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல் துறையினர் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கல்வி கற்கும் மாணவர்கள் தங்கள் எண்ணங்களை சிதற விடாமல் சிறப்பாக கற்க வேண்டும். பள்ளிக்கு வருவதாக கூறி வீட்டில் புறப்பட்டு பள்ளிக்கு வராமல் மாணவர்கள் தவறு செய்யக்கூடாது. அந்த சமயங்களில் தாங்கள் செய்யும் சிறு தவறு கூட பெரும் விளைவை ஏற்படுத்தும். சாலைகளில் நடந்து செல்லும்போதும், இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போதும் சாலை விதிகளை கடை பிடிக்க வேண்டும். கட்டாயம் தலைகவசம் அணிந்தே இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும்.
இவ்வாறு ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
-நவீன் குமார்.