கீழ்க்காணும் கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மத்திய, மாநில அரசை கண்டித்து இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆட்டோ தொழிலை அழிக்க கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பதை கண்டித்தும்,
- மோட்டார் வாகன சட்டம் என்ற பெயரில் ஓட்டுனர் உரிமத்தை பறிப்பதை கண்டித்தும்,
- வாகனத்தை முடக்குவதை கண்டித்தும்,
- அனைத்து வாகனத்திற்கும் மீட்டர் கட்டணத்தை அரசே தீர்மானிக்க வேண்டி வலியுறுத்தியும்,
- ஜீ.எஸ்.டி வரிக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்மாணம் செய்ய வேண்டியும்,
- எழுத, படிக்க தெரிந்த அனைவருக்கும் பேட்ச் வழங்க கோரியும், ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-கே.பி.சுகுமார்.