மருத்துவமனையில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பழச்சாறு அருந்துவது போல் ஒரு வீடியோவை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று காலை வெளியிட்டார். அதை (நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகம் தவிர) மற்ற அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன.
இன்று வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ அப்போல்லோ மருத்துவமனையில்தான் எடுக்கப்பட்டதா? அப்படியானால் எந்த காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டது? செப்டம்பர் 22, 2016 முதல் டிசம்பர் 5, 2016-க்குள் எடுக்கப்பட்ட வீடியோதானா? அதற்கான உண்மை தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதா? என்று பிரபல தமிழ் தொலைக்காட்சி செய்தி சேனல் ஆசிரியரிடம் நாம் விளக்கம் கேட்டிருந்தோம்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரமே உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பது சட்ட விரோதம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ஊடகங்கள் ஒளிப்பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
வெற்றிவேல் வெளியிட்ட வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் தடை!
News
December 20, 2017 3:19 pm