2 ஜி -தீர்ப்பு. -
2 ஜி -தீர்ப்பு.2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ, அமலாக்கத்துறை தவறிவிட்டது என டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பில் கூறியுள்ளார்.
2ஜி வழக்கில் சரியான ஆதாரங்களுடன் வருவார்கள் என 7 வருடம் காத்திருந்தேன். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோடை விடுமுறையில் கூட நீதிமன்றம் வந்தேன். அரசு தரப்பு குற்றசாட்டுகளை நிரூபிக்க தவறி விட்டது.
கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி பெறப்பட்டதா என்ற கேள்விக்கு இடமில்லை. கலைஞர் தொலைக்காட்சி வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும்.
குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில், அரசு மோசமாக தோல்வியடைந்துள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையில் குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை.
அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை மாற்ற நிதிச்செயலாளர் மற்றும் டிராய் பரிந்துரை செய்தார்கள் என அரசு குற்றப்பத்திரிகையில் கொடுத்த தகவல் பொய்யானது.
அரசு ஆவணங்களை, தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையில் தான், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை. குற்றப்பத்திரிக்கையை தயார் செய்ய எடுத்துக் கொண்ட அக்கறையை அதை நிரூபிப்பதில் காட்டவில்லை.
சி.பி.ஐ.யிடம் வாக்கு மூலம் அளித்தவர்கள் நீதிமன்றத்தில் முரண்பட்ட தகவலை தெரிவித்தனர்.
இவ்வாறு டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பில் கூறியுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
குற்றப்பத்திரிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை!- 2 ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை!-தீர்ப்பின் உண்மை நகல்.
News
December 21, 2017 4:22 pm