இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், நடிகை அனுஷ்காவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உட்பட சில முக்கிய பிரமுகர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-எஸ்.சதிஸ் சர்மா.
கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்காவிற்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து!
News
December 22, 2017 10:25 pm