திருவெறும்பூரில் அஞ்சல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

S5040008

திருச்சி திருவெறும்பூரில் உள்ள அஞ்சல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதை கண்டித்து, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அஞ்சல் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டூர் பகுதி குழு உறுப்பினர் சுலைமான் தலைமை வகித்தார்ஆர்ப்பாட்டத்தில் திருவெறும்பூர் நவல்பட்டு ரோட்டில் உள்ள அஞ்சல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கூடாது. மேலும், திருவெறும்பூரில் மின்சார வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும். பழுதாகி உள்ள நவல்பட்டு சாலையை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் லெனின், தங்கதுரைகே.சி.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.