திருச்சி, திருவெறும்பூர் அருகே திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் டயர்கள் வெடித்து கட்டுபாட்டை இழந்து நடந்த விபத்தில், கல்லூரி பேராசிரியர் மற்றும் பெல் ஊழியர் உட்பட 4 பேர் காயம் மேலும் சைக்கிளில் வந்த சிறுவன் மாயமானது குறித்தும் பெல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஈரோடு புலாங்குட்டையை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மனைவி கீர்த்தனா(வயது 28) ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மகளிர் கலை அறியில் கல்லூரியில் பேராசிரியராக வேலைப்பார்த்து வருகிறார்.
இவருக்கு துவாக்குடியில் உள்ள என்.ஐ.டி.யில் ஒரு சான்றிதழ் வரவேண்டி இருந்துள்ளது. அதற்காக தனது மாமியார் சந்திரலேக்கா(வயது 53) ஆகிய இருவரும் காரில் என்.ஐ.டி கல்லூரிக்கு வந்து சான்றிதழை வாங்கி கொண்டு திரும்பி வீட்டுக்கு செல்வதற்காக திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளனர்.
அப்படி வந்தவர்கள் பெல் கணேசபுரம் அருகே வந்தப்போது காரின் முன்னால் மற்றும் பின்னால் உள்ள டயர்கள் அடுத்தடுத்து வெடித்தது. அதனால் கார் ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்து திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியனில் ஏறியதோடு பெல் குடியிருப்பில் இருந்து வேலைக்கு செல்வதற்காக பைக்கில் நின்று கொண்டிருந்த பெல் குடியிருப்பை சேர்ந்த பெல் ஊழியர் ரமேஷ்குமார் மீது பயங்கரமாக மோதியது. அதில் ரமேஷ்குமார் பைக்கோடு தூக்கி வீசப்பட்டு பெல் ரவுண்டானாவில் போய் விழுந்தார். காரும் ரவுண்டானாவில ஏறி நின்றது. மேலும் அந்த விபத்தில் சைக்கிள்; ஒன்றின் மீதும் கார் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த கீர்த்தனா, சந்திரலேக்கா, கார் டிரைவர் மோகன் பெல் ஊழியர் ரமேஷ்குமார் ஆயோர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவம் பற்றி பெல் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பெல் ஊழியர் ரமேஷ்குமாரை பெல் மருத்துவமனையிலும் மற்ற மூன்று பேரையும் துவாக்குடி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த விபத்தில் சேதமடைந்த சைக்கிளை சிறுவன் ஒருவன் ஓட்டி வந்தான் என்றும் அவன் என்னான் என்றும் தெரியவில்லை. அதுக்குறித்தும் பெல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
–ஆர்.சிராசுதீன்.
டயர்கள் வெடித்ததால் கார் விபத்துக்குள்ளானது! -4 பேர் காயம்; ஒரு சிறுவன் மாயம்!
News
December 28, 2017 8:55 pm