ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரன் இன்று சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் பி.தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவிப்பிரமாணம் செய்து வைத்த பின்னர், சபாநாயகர் பி.தனபால், டிடிவி தினகரனுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உறுதிமொழி வாசகத்தை டிடிவி தினகரன் வாசித்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில், தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி, ரத்தினசபாபதி, பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த டிடிவி தினகரனுக்கு, தலைமைச் செயலகம் செல்லும் வழியில் ஏராளமான தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வைகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரனுக்கு, சபாநாயகர் பி.தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!
News
December 29, 2017 4:12 pm