மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இலால்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் ஆர்.சரவணனுக்கு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி பாராட்டு!

4 copy

சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கிடையிலான யோகாசனப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற அரசு பள்ளியில் பயிலும் மாணவன் ஆர்.சரவணன் என்பவரை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி பாராட்டி வாழ்த்து தெரித்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், தெற்கு தெருவை சேர்ந்த மாணவன் ஆர்.சரவணன், இலால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவனின் பெற்றோர் ரவிச்சந்திரன், ரேவதி கூலி வேலை செய்து வருகின்றனர். மாணவன் சரவணன் சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கிடையிலான யோசானப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும், மலேசியாவில் வருகின்ற ஜீன் மாதம் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான யோகாசனப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்களுக்கிடையிலான யோகாசனப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவன் ஆர்.சரவணனை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

-எஸ்.ஆனந்தன்.