திருச்சி மாவட்டம், காட்டூரில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழியில் ஹெல்மெட் போடாத காரணத்தினால் வழக்கறிஞர் சிவக்குமாரை காவலர் கந்தசாமி தாக்கியதால், திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு இன்று (09.01.2018) போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
காவலர் கந்தசாமி மீது புகார் மனு கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததே இந்த போராட்டத்திற்கு காரணம் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர், வழக்கறிஞர்களுடன் பேச்சு வார்த்தை நடந்தியதின் விளைவாக வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
வழக்கறிஞரில் ஒருவருக்கு பாதிப்பு என்றவுடன் வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டத்தில் குதித்தது, இதே நிலைமை பொது மக்களில் ஒருவருக்கு ஏற்பட்டால் எந்த சங்கம் போராடும்?!
-ரா.ரிச்சி ரோஸ்வா.
-ச.ராஜா.