கூத்தைபார் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழாவில், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராஜாமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபாரில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழாவிற்கு, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராஜாமணி தலைமை வகித்தார்.

பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டபின் வருவாய்துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 580 நபர்களுக்கும், வருவாய்துறை சார்பில் 395 நபர்களுக்கும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 10 நபர்களுக்கும், சமூக நலத்துறை சார்பில் 9 நபர்களுக்கும், வேளாண்துறை சார்பில் 10 நபர்களுக்கும், ஆகமொத்தம் 1,017 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

கூத்தைப்பார் பேருராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கும் பணி நடைப்பெற்று வருவதாகும், மேலும், மத்திய, மாநில அரசுகள் வீடு இல்லா ஏழை எளிய மக்களுக்கு 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டதின் கீழ் 102 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகவும்.

பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் திருச்சிக்கு 2017 மற்றும் 2018-ம் தியாண்டில் 5 ஆயிரத்து 40 வீடுகள் கட்டப்படுவதாகவும் இந்த வீட்டின் மதிப்பு ஒன்று தலா ஒரு லட்சத்து 82 ஆயிரம் என்றும் கூறினார்.

மேலும், திருச்சி மாநகராட்சியில் வீட்டுமனை பட்டா வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் 6 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்படுவதாகவும், வீட்டு மனை  இல்லாதவர்களுக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் இரண்டு மூன்று இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு மூலம் வீடு கட்டி கொடுப்பதாகவும், அதற்கு பயனாளிகள் 10 சதவீதம் பங்களிக்க வேண்டும் என்றும் கூறினார்.

சுற்றுபுறம் சுகாதாரம் இல்லாததால் திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்சலால்  60 பேர் வரை பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்தனர் என்றும், தற்போது பொது மக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் சுகாதாரம் காப்பதால் டெங்கு பாதிப்பு முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.

தேசிய அளவில் திருச்சி மாவட்டம் சுகாதாரத்தில் 6-வது இடத்தை பெற்றுள்ளது. அது முதல் இடம் வருவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

பொதுமக்களுக்கு அரசு இலவசமாக ரூ.12 ஆயிரம் மதிப்பில்  கழிவறை கட்டி கொடுப்பதாகவும், அதனால் பொது மக்கள் கழிவறையை பயன்படுத்த பழகிவிட்டதாகவும், அதனால்தான் தமிழக ஆளுநர் தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பது தடை செய்யபட்டுள்ளதாக கூறியுள்ளார் என்று நினைவு கூர்ந்தார். பொது மக்கள் தங்கள் பிரச்சனைக்காக எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராஜாமணி  தெரிவித்தார்.

-ஆர்.சிராசுதீன்.

 

 

 

Leave a Reply