1996-ம் ஆண்டு வரை 2ஜி ஸ்பெக்ட்ரம் கூடுதல் ஒதுக்கீடு கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது.
அப்போது நீதிபதிகள், ஸ்பெக்ட்ரம் என்பது மதிப்புமிக்க தேசிய சொத்து. அது தர்மத்துக்கு கொடுப்பது அல்ல என்று கூறி, கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஏன் இலவசமாக ஒதுக்கப்பட்டது என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அதோடு இந்த புகாருக்கு ஒரு வருடமாக பதில் அளிக்காததால் சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கும், ஒதுக்கீடு பெற்ற பார்தி, வோடபோன், ரிலையன்ஸ், ஐடியா செல்லுலார் உள்பட 7 செல்போன் நிறுவனங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். அந்த நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரமுக்கான தொகையை சுப்ரீம் கோர்ட்டு சட்ட ஆணையத்தில் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டனர்.