நிலத்தகராரில் விவசாயி அடித்து கொலை : குளித்தலை அருகே பதட்டம்!

murderகரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பொய்யாமணி குடித்தெருவை சேர்ந்தவர் செல்லாண்டி மகன் அரவன்(42) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்த ராஜமணி மகன் கருப்பண்ணன் என்ற சுகுமார்(22) இவர் பெட்டவாய்தலையில் தனியார் நிருவனத்தில் வேலை பார்த்து வந்தவர். சுகுமார் நிலத்திற்கு அரவண் பணம் கொடுக்க விவசாயம் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில்  நேற்று (09.09.2013) இப்பகுதியில் வினாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட சுகுமாருக்கும், அரவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சுகுமார் அரவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தடுமாறி  கீழே விழுந்த அரவனை சுகுமார் மேலும் காலால் மிதித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அரவன் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து அரவனின் சகோதரர் ரத்திணகிரி அளித்த புகாரின் பெயரில் குளித்தலை காவல்துறை ஆய்வாளர் பிச்சைபாண்டியன் வழக்குபதிவு செய்து சுகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 -பன்னீர்

 

Leave a Reply