தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று (11.09.2013) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இலங்கைக்கு இந்தியா இரண்டு போர்க்கப்பல்கள் வழங்க முடிவு செய்திருப்பதாக மத்திய இணை மந்திரி கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த தகவலை பார்த்ததும் நான் கடும் அதிர்ச்சியடைந்தேன். இந்தியா வழங்கும் போர்க்கப்பல்களை இலங்கை அரசு, தமிழக மீனவர்களுக்கு எதிராக பயன்படுத்தும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களின் மனதை புண்படுத்தும் செயலாகும். இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தால் அதனை ரத்து செய்ய வேண்டும். போர்க்கப்பல் வழங்கும் பிரச்சனையில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.