விடுதலைப் புலிகளை அமெரிக்காவின் உதவியுடன் தான் அழித்தோம்: கோத்தபாய ராஜபக்ஷ விளக்கம்

kottapayaதமிழீழ விடுதலைப் புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களை ஆழ் கடல் பகுதியில் வைத்து அழிக்க அமெரிக்கா உதவியதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலத்தில் விடுதலைப் புலிகளின் 12 மிதக்கும் ஆயுத களஞ்சியங்கள் அழிக்கப்பட்டன. அவற்றை அழித்தொழிக்க அமெரிக்கா தனது முழுமையான ஆதரவை வழங்கியது. கடற்புலிகளின் ஆயுத விநியோக கப்பல்கள், இலங்கை கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டதால், யுத்தத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களில் நாம் 12 களஞ்சியங்களை அழித்தோம் அமெரிக்கா மிகவும் உதவியாக இருந்ததால் இது சாத்தியமானது. ஆயுத கப்பல்கள் இருந்த இடங்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா வழங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களில் பெரும்பாலானவை திறந்த சந்தைகளில் கொள்வனவு செய்யப்பட்டவை. புலிகளிடம் இருந்த பீரங்கிகளில் பெரும்பாலானவை வடகொரியா மூலத்தை கொண்டவை.

புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் இருந்தன. இவை இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ள போதுமானவையாக இருந்தன. சில சமயம் இலங்கை இராணுவத் திட்டமிருந்ததைவிட கூடுதலானவையாகவும் இருந்தன. புலிகளிடமிருந்த பீரங்கிகள் எமக்கு ஏராளமான இழப்புகளை ஏற்படுத்தின.

புலிகளின் கப்பல்கள் இருக்கும் இடங்களை அமெரிக்கா செய்மதி தொழில்நுட்பங்கள் காட்டிக்கொடுத்தன. இதனடிப்டையில் வழங்கப்பட்ட தகவல்களின்படி இலங்கை கடற்படையினரால் அவற்றை அழிக்க முடிந்தது.

இலங்கையின் போர் குறித்து அமெரிக்கா நிலையான போக்கை கொண்டிருக்கவில்லை. அவர்கள் புலிகளை நியாயப்படுத்தவுமில்லை, இலங்கை படையினருக்கு ஆயுதங்களை வழங்கவுமில்லை.

எனினும் அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றிடம் இருந்து இலங்கையால் ஆயுதங்களை கொள்வனவு செய்ய முடிந்தது என்று கோத்தபாய கூறியுள்ளார்.

Leave a Reply